IPL Records : ஐபிஎல் வரலாற்றில் வேகமாக பந்துவீசி சாதனை படைத்த டாப் 5 வீரர்கள்!
ஐபிஎல் போட்டியில் இதுவரை வேகமாக பந்து வீசிய வீரர்களின் பட்டியலில் ஷான் டெய்ட் முதல் இடத்தில் உள்ளார். 2011 ஆம் ஆண்டில், டெல்லி டேர்டெவில்ஸ் (இப்போது டெல்லி கேபிடல்ஸ்) அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியபோது, அவர் மணிக்கு 157.71 கிமீ வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஐபிஎல் 2022-ல், குஜராத் டைட்டன்ஸின் லாக்கி பெர்குசன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மணிக்கு 157.3 கிமீ வேகத்தில் பந்துவீசியதன் மூலம், சாதனையை படைத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்
ஐபிஎல் 2022 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்காக விளையாடிய உம்ரான் மாலிக், மணிக்கு 157 கிமீ வேகத்தில் பந்து வீசி இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
ஐபிஎல் 2024ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிற்காக விளையாடும் மயங்க் யாதவ், பஞ்சாப் கிங்கிஸிற்கு எதிரான போட்டியில் மணிக்கு 156.7 கிமீ வேகத்தில் பந்து வீசி நான்கவாது இடத்தில் உள்ளார்
தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நார்ட்ஜே, ஐபிஎல் 2020-ல் 156.22 கிமீ வேகத்தில் பந்துவீசி, சாதனை படைத்தார். டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஜோஸ் பட்லருக்கு எக்ப்ரஸ் வேகத்தில் பந்து வீசி கவனத்தை ஈர்த்து ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -