IPL 2023 : வளர்ந்து வரும் இந்திய அணி வீரர்.. யார் இந்த ரிங்கு சிங்?
ரிங்கு சிங் அக்டோபர் 12, 1997ல் உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அலிகார் நகரில் பிறந்தார். எளிமையான குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர்
சிறு வயதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் துப்பரவு பணியாளராக வேலை செய்தார்.
16 வயதில் மல்யுத்தத்தில் ஆர்வம் கொண்டிருந்த ரிங்கு, வளர வளர, கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினார். மேலும் இந்த விளையாட்டில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார்.
16 வயதுக்கு உட்பட்ட உத்திரபிரதேச அணியில் இடம்பிடித்தார். அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே இவர் 83 ரன்களை குவித்து அசத்தினார். 2017 ஆம் ஆண்டில் சென்னை அணியினர் ஏலம் எடுத்தனர்.
2018 ஆம் ஆண்டில் கொல்கத்தா அணிக்கு வந்தபிறகு, நெட் ஆட்டக்காராக இருந்தார். கடந்த ஆண்டில் கொல்கத்தா அணியின் மெயின் லெவெனில் இடம்பிடித்து, இந்தாண்டின் ஐபிஎல் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது, ரிங்கு சிங் , 5 பந்துகளிலும் சிக்ஸர் அடித்ததால் புகழின் வெளிச்சத்திற்கு வந்தார்.
நேற்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கொல்கத்தா அணியின் வெற்றிக்கு உதவினார். இதனால் ரிங்கு சிங்கை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.