SRH vs RCB : முட்டுக்கட்டையாக இருக்கும் ஹைதராபாத்..ப்ளே ஆஃப் செல்லுமா பெங்களூரு?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடக்கிறது
ஐபிஎல் தொடரில் இதுவரை பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சன்ரைசர்ஸ் அணி 12 முறையும், பெங்களூர் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
இந்த சீசனில் பெங்களூர் 12 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் சன்ரைசர்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளது.
இன்று நடக்கும் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது . இப்போட்டியில் பெங்களூர் தோல்வி அடைந்தால் ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறும்.
ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணிக்கும் ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான பெங்களூர் அணிக்கும் இடையில் நடக்கவிருக்கும் போட்டியை பார்க்க பலரும் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -