IPL 2023 : வீணாய் போன ருத்ராஜின் தாண்டவம்..தொடக்க ஆட்டத்தில் தோல்வி அடைந்த சி.எஸ்.கே!
கடைசி 5 ஓவர்களில் சுமார் 38 ரன் தேவை என்ற நிலையில் விஜய் ஷங்கர் மற்றும் ரஷீத் கானின் ஆட்டம் அணியின் வெற்றியை உறுதி செய்தது.
சென்னை அணியில் முதலாவதாக களம் இறங்கிய டெவோன் கான்வே சொர்ப்ப ரன்களில் ஆட்டம் இழக்க ருத்துராஜின் தாண்டவத்தால், சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.
குஜராத் அணி வெற்றி பெற 179 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர் சுப்மன் கில் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார்.
ஆட்டத்தின் போது ருத்ராஜ் தூக்கி அடித்த பந்தை எல்லைக்கோட்டில் இருந்து தடுக்கும் போது கீழே விழுந்து காயமடைந்தார் கேன் வில்லியம்சன். முட்டியில் பலமாக அடிப்பட்டதால், ஐ.பி.எல் போட்டியில் இருந்து விலகுகிறார்.
சுமார் 11 மாதங்கள் கழித்து களம் புகும் தோனி, ரசிகர்களை ஏமாற்றாமல் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்தார்