RCB vs SRH: ஆறுதல் வெற்றிக்காக களமிறங்கும் ஹைதராபாத் ; ரெக்கார்டு சொல்வது என்ன?
இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி, இந்த போட்டியிலும், அடுத்து நடக்க இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் டாப் இரண்டில் நிறைவு செய்யும் முனைப்பில் விளையாடும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஹைதராபாத் அணியைப் பொருத்தவரை, இந்த சீசனில் 12 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றியை ஈட்டியதுள்ளது. இதனால், பெங்களூரு, மும்பை என இரண்டு அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்ய போராடும் என தெரிகிறது.
இதுவரை, ஐபிஎல் வரலாற்றில் 19 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், ஹைதராபாத் 10 முறையும், பெங்களூரு 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
இன்று போட்டி நடைபெற இருக்கும் ஷேக் சையத் மைதானத்தில் இரு அணிகளும் ஒரு முறை மோதியுள்ளன. இதில், ஹைதராபாத் அணியே வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு - ஹைதராபாத் மோதிக் கொண்ட போட்டிகளின் ரெக்கார்டைப் பார்த்தால், ஹைதராபாத் அணியே ஆதிக்கம் செலுத்துகிறது. எனினும், இந்த சீசனில் ஹைதராபாத் அணியின் மோசமான ஃபார்ம் முதல் பாதியை அடுத்து இரண்டாம் பாதியிலும் தொடர்வதால், இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கின்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -