IPL 2021, RCB vs CSK: அனல் பறந்த சிஎஸ்கே - ஆர்சிபி ஆட்டம்.. வெற்றியில் முடிந்த தல - சின்ன தல ஃபினிஷிங் - போட்டோஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ஷார்ஜாவில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஓப்பனிங் களமிறங்கிய கோலி, படிக்கல் இணை 100 ரன்களுக்கு களத்தில் நின்றது. தொடக்கம் முதலே பவுண்டரிகளை பறக்கவிட்ட இரு வீரர்கள், 11.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டி வலுவான இலக்கை எட்டுவதற்கு அடித்தளம் போட்டனர்.
வேகமாக ரன் சேர்ந்தது போல இருந்த நிலையில், கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தியது. ஏபிடியை தொடர்ந்து படிக்கல், சிங்கப்பூர் டிம் டேவிட், மேக்ஸ்வெல், ஹர்ஷல் பட்டேல் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, 200-ஐ எட்டும் என எதிர்ப்பார்க்கபப்ட்ட ஸ்கோர் 156-ல் முடித்து கொண்டது ஆர்சிபி.
சென்னை அணிக்கு ஓப்பனிங் களமிறங்கிய ருதுராஜ், டுப்ளெசி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பவர் ப்ளேவில் பவுண்டரிகளை அடித்து ரன் சேர்த்தனர். இதனால், 6 ஓவர்கள் முடிவில் 55 ரன்கள் எட்டியிருந்தது சென்னை.
போட்டியின் 9 & 10-வது ஓவர்களில் அடுத்தடுத்து ருதுராஜ், டுப்ளெசி அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி, 2 சிக்சர்களை அடித்துவிட்டு ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
போட்டியை முடித்து வைக்கும் பொறுப்பில் ரெய்னாவும், தோனியும் களத்தில் இருந்தனர். தோனி நிதானமாக கூட நிற்க, ரெய்னா ஹசரங்காவின் ஓவரில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரிகளை அடித்து இலக்கை நெருங்கினார். 18.1 ஓவரில், 4 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி போட்டியை வென்றது. இதனால், 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மீண்டும் சென்னை அணி முதல் இடம் பிடித்துள்ளது.
இந்த சீசனோடு ஆர்சிபியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலக உள்ளதால், இரு அணிகளும் ப்ளே ஆஃப் சென்றால், மீண்டும் ஒரு முறை கேப்டன் தோனி vs கேப்டன் கோலியின் ஆட்டத்தை பார்க்கலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -