PBKS vs KKR: கடைசி ஓவர் வெற்றியால் இன்னும் ப்ளே ஆஃப் ஆட்டத்தில் களம் காணும் பஞ்சாப் கிங்ஸ்
நடப்பு ஐபிஎல் சீசனின் 45-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் ஃபீல்டிங் தேர்வு செய்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஓப்பனிங் களமிறங்கினர். பவுண்டரியோடு போட்டியை தொடங்கினார் வெங்கடேஷ் ஐயர். ஆனால், ஹர்ஷதீப் சிங் வீசிய 4வது ஓவரில் கில் க்ளீன் பவுல்டாகி வெளியேறினார்.
கில் அவுட்டானதை தொடர்ந்து, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர், திரிபாதி இணை பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில், கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.
அதனை அடுத்து, இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ராகுலும், மயாங்க் அகர்வாலும் சிறப்பான ஓப்பனிங் தந்தனர். 9வது ஓவரை இந்த இணை களத்தில் நின்றது. அணியின் ஸ்கோர் 70-ஐ எட்டியப்போது வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் மயாங்க் அவுட்டாகினார். இந்த போட்டியில் அரை சதம் கடந்த ராகுல், ஐபிஎல் தொடரில் தனது 26வது அரை சதத்தை நிறைவு செய்தார்.
டெத் ஓவர்களில் களமிறங்கினார் தமிழ்நாடு வீரர் ஷாரூக்கான். வந்தவுடன் அவர் அடித்த 1 சிக்சர், 1 பவுண்டரி பஞ்சாப் அணியின் ஸ்கோர் இலக்கை நெருங்கியது. பஞ்சாப் அணி வெற்றி பெற 4 ரன்கள் தேவை என்ற நிலையில், ஸ்ட்ரைக்கிங் எண்டில் இருந்த ஷாரூக்கான் சிக்ஸ் அடித்து பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
நேற்றைய போட்டியில், பஞ்சாப் அணிக்காக ஷாரூக்கானும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி போன்ற தமிழ்நாடு வீரர்கள் களமிறங்கி இருந்தனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -