IPL 2021, KKR vs PBKS: கொல்கத்தா vs பஞ்சாப் ரெக்கார்டு சொல்வது என்ன? வெற்றி யாருக்கு?
ஐ.பி.எல். 2021-ஆம் தொடரின் 45-வது ஆட்டம் இன்று துபாயில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு இரு அணிகளுக்கும் இனி வரும் ஆட்டங்கள் வாழ்வா? சாவா? என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பஞ்சாப் அணி 9 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 19 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டி இன்று நடைபெறும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளும் மோதிக்கொள்வது இதுவே முதன்முறை ஆகும்.
இரு அணிகளும் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் பஞ்சாப் அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 4 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளும் இதற்கு முன்பு 1 போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் 6 போட்டியிலும், பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்த 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 2வதாக பேட்டிங் செய்து 4 போட்டியிலும், கொல்கத்தா அணி சேசிங் செய்து 13 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -