#ThankYouKohli ”தோற்றாலும், வென்றாலும் கேப்டன் ஒருவனே” - கோலியை வழி அனுப்பி வைத்த ரசிகர்கள்

2021 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், நேற்று ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு, பேட்டிங் களமிறங்கியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
நிதானமாக தொடங்கிய பெங்களூரு பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்கவில்லை. கொல்கத்தா வீரர் சுனில் நரேன் 4 விக்கெட்டுகளை எடுக்க, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது பெங்களூரு அணி.

அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, தொடக்கத்தில் சவாலாக இருந்தார் ஹர்ஷல் பட்டேல். ஓப்பனர்கள் சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயரின் விக்கெட்டுகளை எடுத்து நம்பிக்கை கொடுத்தார்.
ஹர்ஷல் பட்டேலை தொடர்ந்து, சாஹல் இரண்டு விக்கெட்டுகளை எடுக்க போட்டி பரபரப்பாக இருந்தது.
ஆனால், சவால்களை சமாளித்து விளையாடிய கொல்கத்தா பேட்டர்கள் ரானா, நரேனா ஆகியோர் தலா 20+ ஸ்கோர் செய்ய எளிதான இலக்கை நெருங்கினர்
பெங்களூரு அணி வீரர்களாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை.
இதனால் 19.4 ஓவர்களில், இலக்கை எட்டி போட்டியை வென்றது கொல்கத்தா. புதன்கிழமை ஷார்ஜாவில் நடைபெற இருக்கும் குவாலிஃபையர் 2 போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சந்திக்க உள்ளது.
இந்த சீசனோடு ஆர்சிபியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலக உள்ளதால், தோல்வியோடு தனது ஆர்சிபி கேப்டன்சி பொறுப்பை நிறைவு செய்துள்ளது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது. எனினும், #ThankYouKohli என்ற ஹேஷ்டேக்கில் கோலிக்கு நன்றி தெரிவித்து கிரிக்கெட் ரசிகர்கள் கேப்டனுக்கு வழி அனுப்பி வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -