Ruturaj Gaikwad : வேங்கை வாழ்ந்த காட்டிலே..வேங்கை வந்து நிரப்பிடும் கதையோ..சி.எஸ்.கேவின் கேப்டன் ஆனார் ருதுராஜ்!
சுபா துரை | 21 Mar 2024 08:15 PM (IST)
1
ஐ.பி.எல் 2024 போட்டி நாளை சென்னையில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் மோதவுள்ளன.
2
சி.எஸ்.கே அணியை 2008 ஆம் ஆண்டு முதல் தலைமை தாங்கினார் எம்.எஸ்.தோனி.
3
தோனிக்கு 42 வயதான நிலையில் சி.எஸ்.கேவின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி சி.எஸ்.கே நிர்வாகத்திடம் கேட்கப்பட்ட போது அதனை தோனி தான் முடிவெடுப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
4
இதனையடுத்து சி.எஸ்.கே அணி நிர்வாகம் இன்று தனது புதிய கேப்டனை அறிவித்துள்ளது.
5
சி.எஸ்.கே அணியில் கடந்த சில ஆண்டுகளாக ஓப்பனராக விளையாடி வரும் 27 வயதான ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கேவின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
6
இவர் உள்நாட்டு போட்டிகளில் மஹராஷ்டிரா அணி கேப்டனாக விளங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.