IPL : அதிக முறை 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.இதுவரை 24 முறை 200 ரன்னுக்கு மேல் சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு மே 1ம் தேதி மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது.
2008ல் சென்னை அணி கிங்ஸ் 11 பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 240 ரன்கள் குவித்தது. இது சென்னை அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
கடந்த 2013ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெறும் 3 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. இது சென்னை அணியின் மூன்றாவது அதிகபட்ச ரன் எண்ணிக்கை ஆகும்.
சென்னை அணியின் நான்காவது அதிகபட்ச ஸ்கோர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2012ம் ஆண்டு பதிவானது. சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.
கடந்த 2021 ம் ஆண்டு சென்னை அணி, கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. அப்போது சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. இது சிஎஸ்கேவின் 5வது அதிகபட்ச ரன்னாகும்
நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 217 ரன்கள் குவித்து அசத்தியது. இதுதான் சென்னை அணி 7வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.