CSK Tickets : ப்ளாக் டிக்கெட் விற்பனையாளர்களுக்கு சி.எஸ்.கே அணி நிர்வாகம் வைத்த செக்!
ஐ.பி.எல் 2024 வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.
இதனையடுத்து சி.எஸ்,கே அணி வீரர்கள், சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது சி.எஸ்.கே அணி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சி.எஸ்.கே நிர்வாகம், இந்த சீசனில் சி.எஸ்.கே விளையாடும் அனைத்து போட்டிகளில் டிக்கெட்டுகளும் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, நேரடி டிக்கெட்டை வாங்கி கள்ளச்சந்தையில் அதிக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -