மாமல்லபுரத்தில் அலைச்சறுக்கு போட்டி..அசாத்திய சாகசங்களை செய்து அசத்திய வீரர்கள்!
இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அலைசறுக்கு போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா தரப்பில் 16 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட சர்வதேச அலை சறுக்கு வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவர்
இப்போட்டியில் பரிசுகளை வெல்ல இருபாலாரும் முந்திக்கொண்டு தங்கள் சாகசங்களை நிகழ்த்தி வருகின்றனர்
இரண்டாம் சுற்று ஆட்டத்தில் பிலிப்பைன்ஸ் வீரர் ராபர்ட் மகலூனா, தொடரின் அதிகபட்ச ஒற்றை அலை மதிப்பெண்ணை பதிவு செய்து அசத்தியுள்ளார்
தமிழ்நாடு வீரர் சிவராஜ் பாபு ஒருவர் மட்டுமே மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்
ஜப்பானின் ரியோ இனபா ஒரே அலையில் 6.50 புள்ளிகளும், இந்தோனேசியா வீரர் டானி விடியாண்டோ 6.40 புள்ளிகளும் அசத்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மகளிர் பிரிவில் இந்தியாவின் சுகர் சாந்தி பானர்சே மற்றும் கமலி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
வருகின்ற 20 ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற்று, பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது