Leo : அடுத்து யாருக்கு பிறந்தநாள்? அப்டேட் கொடுக்குமா லியோ படக்குழு..?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் லியோ.
லியோ படக்குழு அப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பிறந்தநாட்களில் அப்டேட்கள் கொடுப்பத்தை வாடிக்கையாகவே கொண்டுள்ளது.
விஜய் பிறந்தநாளையொட்டி, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் பர்ஸ்ட் சிங்கிளான ‘நான் ரெடிதான்’பாடலும் வெளியானது.
பின்னர், சஞ்சய் தத்தின் பிறந்தநாளுக்கு அவர் நடித்துள்ள ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
இதனையடுத்து 15 ஆம் தேதியன்று அர்ஜூன் நடித்துள்ள ஹரோல்ட் தாஸ் கதாபாத்திரத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
அனுராக் காஷ்யப்பின் பிறந்தநாள் வருகின்ற செப்டம்ர் 10 ஆம் தேதியன்றும் பிரியா ஆனந்தின் பிறந்தநாள் செப்டம்பர் 17 ஆம் தேதியன்றும், மிஷ்கினின் பிறந்தநாள் செப்டம்பர் 20 ஆம் தேதியன்றும் கொண்டாடப்படவுள்ளது. இந்த நாட்களில் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்ப்பார்க்கலாம்.