HBD Deepak Niwas Hooda : இன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்திய கபடி அணியின் கேப்டன் தீபக் நிவாஸ் ஹூடா!
சுபா துரை | 10 Jun 2023 06:44 PM (IST)
1
இந்திய கபடி அணியின் ஸ்டார் வீரர் மற்றும் கேப்டன் தீபக் நிவாஸ் ஹூடா.
2
ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள சமாரியா கிராமத்தில் உள்ள எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஹூடா.
3
இவர் இந்தியாவில் நடைப்பெறும் ப்ரோ கபடி லீக் இன் மூலம் பிரபலம் அடைந்தார்.
4
ப்ரோ கபடி லீக் இன் நம்பர் 1 ஆல் ரவுண்டராக கருதப்படும் தீபக் ஹூடா, 2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.
5
இவர், 7 ஜூலை 2022 அன்று, குத்துச்சண்டை வீராங்கனையான சவீட்டி பூராவை மணந்தார்.
6
இவ்வாறு கபடி விளையாட்டு உலகில் ஜொலித்து வரும் தீபக் நிவாஸ் ஹூடா இன்று தனது 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.