Ind vs Eng 4th Test: இன்னிங்ஸ் தோல்விக்கு ‛வெச்சு செய்த’ இந்தியா... முழு ஆல்பம் இதோ!
செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 191 ரன்கள் எடுத்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகோலி அரை சதம் எடுக்க, இந்திய அணிக்கு ஆறுதலாக இருந்தது ஷர்துல் தாகூர். முதல் இன்னிங்ஸில் 57 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, அணி 99 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது, ரோஹித் ஷர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்தார். இதுவரை, டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ளூர் மைதானங்களில் மட்டும் 7 சதங்களை அடித்துள்ள ரோஹித், முதல் முறையாக ஓவர்சீஸ் சதத்தை இன்று பதிவு செய்தார்.
புஜாரா ரோஹித்தோடு பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தார். இந்த இணை 153 ரன்களுக்கு களத்தில் நின்றது.
கடைசி நாள் ஆட்டமான இன்று, போப்பின் விக்கெட்டை வீழ்த்தியது மூலம் பும்ரா தனது 100-வது டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டை கைப்பற்றினார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்த வீரரானார் பும்ரா.
இதுவரை, ஓவல் மைதானத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. 1971-ம் ஆண்டுக்குப் பிறகு, கோலி தலைமையிலான இந்திய அணி போட்டியை வென்று அசத்தியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -