ஐசிசியின் கனவு அணி வெளியீடு..அதில் எத்தனை இந்திய வீரர்கள் இருக்காங்க தெரியுமா?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வருடா வருடம் சிறந்த வீரர்களுக்கு விருதுகள் வழங்குவதுண்டு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்நிகழ்வில் ஐசிசி, உலகின் சிறந்த வீரர்களைக் கொண்டு ஒரு அணியை உருவாக்கியுள்ளது.
இந்த அணியில் இந்திய அணியைச் சேர்ந்த வீரர்கள் ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர். உலகின் சிறந்த வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அணியின் கேப்டனாக கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி கனவு அணியில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி ,சுப்மன் கில், முகமது சமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.
குல்தீப் யாதவ் கடந்த 2023 ஆம் ஆண்டில் சுழற் பந்துவீச்சு பிரிவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நபராக இருக்கிறார். முகமது சிராஜ் கடந்த 2023 ஆம் ஆண்டில் வேக பந்துவீச்சு பிரிவில் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
ரோஹித் ஷர்மா கடந்தாண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திர வீரர் விராட் கோலி கிரிக்கெட் உலகில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -