Arun Vijay : படத்திற்கு கிடைத்த வெற்றி என்னுடைய வலிகளை மறக்கடித்துவிட்டது... அருண் விஜய் நெகிழ்ச்சி!
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ஏ.எல் விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்திருந்த திரைப்படம் 'மிஷன் சாப்டர் 1'.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபொங்கலுக்கு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு அருண் விஜய்யின் அபாரமான நடிப்பு பாராட்டுகளையும் குவித்தது.
கேப்டன் மில்லர் மற்றும் அயலான் திரைப்படங்களுடன் போட்டியிட்டு களத்தில் இறங்கிய 'மிஷன் சாப்டர் 1' திரைப்படம் சைலெண்டாக ஹிட் அடித்தது.
'மிஷன் சாப்டர் 1' படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி கூறும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போட்டோ போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார்.
இப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் ஸ்டண்ட் காட்சியில் நடிக்கும் போது விபத்து ஏற்பட்டு எலும்பு முறிவு மற்றும் தசைநார் கிழிந்ததால் 2 மாதங்களுக்கு படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வந்தார்.
அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து தான் அனுபவித்த வலிகள் அனைத்தும் மிஷன் படத்திற்கு கிடைத்த வெற்றி மறக்கடித்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார். .
- - - - - - - - - Advertisement - - - - - - - - -