SAFF Championship : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்தியாவிற்கு முதல் வெற்றி!
14 ஆவது தெற்காசிய கால்பந்து போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீராவா மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஜூன் 21 தொடங்கி ஜூலை 4 ஆம் தேதி வரை நடக்கும் இப்போட்டியின் முதல் நாளான நேற்று நடைப்பெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி, 74ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி 3 ஆவது கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
81 ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்காக உதந்தா சிங் கோல் அடிக்க கோல் எதுவும் அடிக்காமலே பாகிஸ்தான் அணி தோல்வியுற்றது. இதன் மூலம் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.
இந்த போட்டியின் முதல் பாதியின் முடிவில் பாகிஸ்தான் வீரர்களுடன் சலசலப்பில் ஈடுபட்டதற்காக இந்திய அணியின் பயிற்சியாளர் இசோர் ஸ்டிமாக்கிற்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -