Tamannaah : ‘கதைக்கு தேவைப்பட்டதால் நெருக்கமாக நடித்தேன்..’ சர்ச்சைக்கு பதிலளித்த தமன்னா!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் தமன்னா.
சந்த் சா ரோஷன் செஹ்ரா என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமாகி, இதுவரை 65 படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ட்ரெய்லரில் இடம் பெற்ற காட்சிகளில் கவர்ச்சியான உடை உடுத்திருந்த தமன்னா சர்ச்சைக்கு உள்ளானார்.
அதனை தொடர்ந்து ஓடிடியில் வெளியான ஜி கர்தா வெப் தொடரில், தமன்னா அரை நிர்வாண காட்சிகளில் நடித்து பேசு பொருளாகியுள்ளார்.
ஜி கர்தா வெப் தொடரில் இரட்டை அர்த்த வசனங்களை பேசியுள்ளார். அத்துடன் நெருக்கமான காட்சிகளிலும் நடித்துள்ளார்.
பூகம்பம் போல் வெடித்த சர்ச்சைக்கு தமன்னா விளக்கம் அளித்துள்ளார். “கதைக்கு தேவையாக இருந்ததால் நெருக்கமான காட்சிகளில் நடித்தேன். ஜி கர்தா வெப் தொடர் பள்ளி பருவ காதல் கதை.எனவே அந்த கதைக்கு நெருக்கமான காட்சிகள் தேவையாக இருந்தது. காதல் உறவை விளக்க கதையை வலுப்படுத்தவும் அப்படி நடித்தேன்”என தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.