Happy Birthday Vijay : நாளைய தீர்ப்பில் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் வாரிசாக உருவெடுத்த நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் இன்று!
பிரபல இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா தம்பதிக்கு 1974 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதியன்று பிறந்த குழந்தைதான் ஜோசப் விஜய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதனது தந்தை இயக்கிய வெற்றி படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் அறிமுகமானார். இதில் விஜய்காந்தின் சிறுவயது கேரக்டரில் நடித்திருப்பார்.
அதைதொடர்ந்து 1992ல் வெளியான நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.அப்படம் மிக பெரிய தோல்வி அடைந்தது. பத்திரிக்கை ஒன்று, விஜய்யை‘இதெல்லாம் ஒரு மூஞ்சியா’என்று விமர்சித்தனர்.
அதைபொருட்படுத்தாமல் விஜய் தொடர்ந்து நடித்து வந்தார் நான்கு அண்டுகள் கழித்து பூ வே உனக்காக படம் சூப்பர் டுப்பர் ஹிட் ஆனது.
பின்னர் 1998ல் வெளியான காதலுக்கு மரியாதை படம் விஜய்க்கு குடும்ப ரசிகர்களை பெற்று தந்தது.
அடுத்தடுத்து வெளிவந்த படங்கள் விஜய்க்கு பெரிய வெற்றி படங்களாக அமைந்தது. முக்கியமாக கில்லி படம்தான் விஜய் கேரியரில் வசூல் ரீதியான மாபெரும் வெற்றியை பெற்றது.
அதைதொடர்ந்து துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், சர்கார்,பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு என பல வெற்றிப் படங்களை வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஸ்டார் ஆனார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் பிசியாக உள்ளார். விஜய்யின் பிறந்தநாளான இன்று, லியோ குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தளபதி 68 குறித்த தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -