FIFA World Ranking: 'மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு..’ 100 ஆவது இடத்திற்கு முன்னேறிய இந்திய கால்பந்து அணி!
உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக இருப்பது கால்பந்து. இந்தியாவில் கிரிக்கெட்டின் ஆதிக்கம் இருந்தாலும் கால்பந்துக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. தற்போது இந்தியாவில் கால்பந்தை மக்கள் மத்தியில் அதிகளவில் கொண்டு சேர்ப்பதற்காக ஐ.எஸ்.எல் லீக் நடத்தப்பட்டு வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த நிலையில், ஃபிபா எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. புதிய தரவரிசை பட்டியல்படி இந்திய அணி 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி தரவரிசை பட்டியலில் 100வது இடத்திற்குள் சென்றுள்ளது. இந்திய அணி மொத்தம் 1204.90 புள்ளிகளை பெற்றுள்ளது.
இந்திய அணியின் நான்காவது சிறந்த இடம் இதுவாகும். இந்திய அணியின் அதிகபட்ச சிறந்த இடம் என்பது 1996ம் ஆண்டு பிடித்த 94வது இடமே ஆகும்.
மேலும், 1993ம் ஆண்டு இந்திய அணி 99வது இடத்தை பிடித்திருந்தது. 2017-2018ம் ஆண்டு 96வது இடத்தை பிடித்துள்ளது. 100வது இடத்தை பிடித்துள்ள இந்தியா லெபனான் மற்றும் நியூசிலாந்து அணிகளை பின்னுக்கு தள்ளியுள்ளது. ஒட்டுமொத்த தரவரிசையை பொறுத்தவரையில் உலகக்கோப்பையை கைப்பற்றிய அர்ஜெண்டினா அணி முதலிடத்தில் உள்ளது. உலகக்கோப்பையை தவறவிட்ட பிரான்ஸ் அணி தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளது.
5 ஆண்டுகளுக்கு பிறகு 100வது இடத்தை பிடித்துள்ள இந்திய அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -