Super Six : கடைசி இரண்டு அணிகளுக்கான தகுதி சுற்று சூப்பர் சிக்ஸ் போட்டி இன்று தொடக்கம்!
2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. 8 அணிகள் முன்பே தேர்வாகியுள்ளது. இன்னும் இரு அணிகளுக்கான சூப்பர் சுற்று இன்று தொடங்குகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇலங்கை, ஓமன்,ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் சூப்பர் சிக்ஸ் போட்டியில் தகுதி பெற்றுள்ளது.
இந்த சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் உலக கோப்பை செல்ல அதிக வாய்ப்புள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி நடக்கவிருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு கிடைக்கும்.
ஓமன் அணியும் அதே நிலையில் தான் உள்ளது. இரு அணிகளுக்கும் மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே உலக கோப்பை வாய்ப்பு கிடைக்கும்
இன்று தொடங்கும் சூப்பர் சிக்ஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - ஓமன் அணிகள் மோதுகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -