மிரட்டும் கிறிஸ்டியானோ ரொனால்டோ.. வெற்றி பெற்றது அல்நசர் அணி!
நேற்று நடைபெற்ற ஏசியன் சாம்பியன் லீக்கில் பலம் வாய்ந்த அல்நசர் அணியும், அல் துகைல் அணியும் மோதின. இதில் தொடக்கம் முதலே இரு அணிகளும் மாறி மாறி பந்தை வலைக்குள் தள்ள, போட்டியின் முடிவில் 4-3 என்ற கணக்கில் அல்நசர் அணி வெற்றி பெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅல் துகைல் அணி சார்பாக முகமது 63' , அலி 67', ஒலுங்கா 85' கோல்களை பதிவு செய்தனர். அல் நாசர் அணி சார்பாக டெலிஷ்கா 25', மானே 56', நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இப்போட்டியில் இரண்டு கோல்களை பதிவு செய்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ 61' ,81' நிமிடங்களில் பந்தை வலைக்குள் தள்ளினார். முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதினாலும் இரண்டாவது பாதியில் அல் துகைல் அணி ,இரண்டாவது பாதியை தன் வசமாக்கி போராடி தோற்றது.
முதல் பாதி ஆட்டத்திலும் இரண்டாவது பாதி ஆட்டத்திலும் நேர்த்தியாக விளையாடிய அல் நாசர் அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் E' பிரிவில் இடம் பெற்றுள்ள அல் நாசர் அணி முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று
நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்றதால் புள்ளி பட்டியலில் 9 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அல் நாசர் அணி தொடர்ந்து சவுதி ப்ரோ லீக் மற்றும் ஏசியன் சாம்பியன் லீக் கால்பந்து போட்டிகளில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணியின் சிறந்த கேப்டனாகவும் களத்தில் ஆக்ரோஷமான வீரராகவும் செயல்படுகிறார் என அவரது ரசிகர்கள் அவருக்கு இணையங்களில் புகழாரம் தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -