Thalaivar 170 : '33 வருடங்களுக்கு பிறகு மீண்டும் என் வழிகாட்டியோடு நடிக்கின்றேன்'..மெய்சிலிர்த்த ரஜினிகாந்த்!
ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் உடன் 170வது படத்தில் இணைந்துள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபஹத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅனிருத் இசையமைக்கும் இந்த படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனிடையே தலைவர் 170 என இப்படத்திற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினி, நடிகர் அமிதாப்பச்சனுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “33 ஆண்டுகளுக்குப் பிறகு எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஹிந்தியில் ஹம், அந்தா கானூன் மற்றும் ஜெராஃப்தார் உள்ளிட்ட படங்களில் ரஜினி மற்றும் அமிதாப் இணைந்து நடித்துள்ளார்.
இதனையடுத்து அவர்கள் நடித்த படங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -