ZIM vs SCO: ஜிம்பாப்வேயின் உலக கோப்பை கனவை சிதைத்த ஸ்காட்லாந்து அணி!
உலக கோப்பைக்கான சூப்பர் சிக்ஸ் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணியுடன் பலப்பரிச்சை நடத்தியது ஜிம்பாப்வே. இதில் முதலில் பேட்டிங் செய்தது ஸ்காட்லாந்து.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகிறிஸ்டோபர் மெக்பிரைட், மேத்யூ கிராஸ் ஆகியோர் நிதானமாக ஆடி அணிக்கு ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் மைக்கல் லீஸ்க் மட்டும் நிதானமாக ஆடி அணிக்காக ரன்களை சேர்த்தார். 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த போட்டியில் வென்றால் உலக கோப்பைக்கு தகுதி ஆகிவிடலாம் என்ற கனவுடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் கனவு கோட்டையை சுக்கு நூறாக உடைத்தது ஸ்காட்லாந்து அணி.
போட்டி தொடங்கிய சில நிமிடத்திலேயே 4 விக்கெட்டுகளை அடுத்து அடுத்து இழந்து தடுமாறியது ஜிம்பாப்வே. பின்னர் வந்த ரியான் பர்ல்,வெஸ்லி மாதேவர் ஆகியோர் அணியை வெற்றி பாதையை நோக்கி இழுத்து சென்றார்.
41.1 ஓவரில் ஜிம்பாப்வே அணி 203 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் சூப்பர் சிக்ஸ் நடந்த இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்று உலக கோப்பை போட்டிக்கும் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது ஸ்காட்லாந்து.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -