Super Six : ஓமனை வீழ்த்தி உலக கோப்பைக்கான வாய்ப்பை தக்கவைத்து கொண்ட நெதர்லாந்து!
நேற்று சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது ஓமன். டாஸ் வென்ற ஓமன் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆட்டம் தொடங்கும் நேரத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று நேரத்திற்கு நிறுத்தப்பட்டது. பின்னர் 50 ஓவரில் இருந்து 48 ஓவராக குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கப்பட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் விக்ரம்ஜித் சிங் 110 ரன்கள் எடுத்து அசத்தினார். பரேசியும் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த பாஸ் டி லீட், சாஹிப் சுல்பிகர் ஆகியோர் அணிக்கு சுமாரான பங்களிப்பை அளித்தனர். 48 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்க்கு 362 எடுத்தது நெதர்லாந்து.
363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஓமன் சிறப்பாக தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவு பங்களிப்பை கொடுத்து ஆட்டமிழக்க பின்னர் வந்த அயான் கான் நிதானமாக ஆடி அணிக்கு ரன்களை சேர்த்தார்.
அயான் கான் மற்றும் சோயப் கான் இருவரும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் முயற்சியில் ஈடுப்பட்டனர். 214 ரன்களை ஓமன் அணி எடுத்திருந்த நிலையில் சோயப் கான் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஒரு முனையில் அயான் கான் போராடிக் கொண்டிருக்க மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 44 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை மட்டுமே ஓமன் இழந்திருந்தபோது வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு டி.எல்.எஸ் முறைப்படி நெதர்லாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -