SMP Vs ITT : திருப்பூர் அணியை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய மதுரை!
7வது சீசனின் டி.என்.பி.எல் போட்டியில் நேற்று ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மதுரை பாந்தர்ஸை எதிர்கொண்டது. டாஸ் வென்ற திருப்பூர் பந்து வீச்சை தேர்வு செய்தது.
மதுரை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுரேஷ் லோகேஷ்வர் மற்றும் ஹரி நிஷாந்த் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 68 ரன்கள் எடுத்திருந்த போது மதுரை முதல் விக்கெட்டை இழந்தது.
பின்னர் களமிறங்கிய வி. ஆதித்தியா அவருடைய பங்களிப்பை கொடுத்தார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது மதுரை அணி.
பின்னர் களமிறங்கிய திருப்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விஷால் வைத்யா மற்றும் துஷார் ரஹேஜா திறம்பட ஆடி அணிக்கு நிலையான ஒரு தொடக்கத்தை கொடுத்தனர்
துஷார் ரஹேஜா சிறப்பாக அடி 41 பந்துகளில் ஒரு சிக்சர் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர் 156 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது திருப்பூர் அணி. இந்த த்ரில் வெற்றியை பெற்ற மதுரை அணி 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.