IND vs NZ : நியுசிலாந்திற்கு எதிரான 20 வருட வெற்றி வேட்கையை தீர்த்து கொள்ளுமா இந்திய அணி..?
உலகக் கோப்பையின் இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. தோல்வியையே சந்திக்காமல் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் இந்த அணிகள், நடப்பு உலகக் கோப்பையில் வலுவான அணி யார் என்பதை நிரூபிக்கும் வகையில் இன்று மோத உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசர்வதேச ஒருநாள் போட்டிகளில் 116 முறை இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 58 முறை வென்று இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. ஆனால், ஐசிசி தொடர்கள் என வரும்போது நியூசிலாந்தின் ஆதிக்கம் தான் மேலோங்கி உள்ளது.
கடந்த 20 வருடங்களில் 50 ஓவர் உலக் கோப்பையில் ஒருமுறை கூட இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது இல்லை. அதவாது கடந்த 2003ம் ஆண்டிற்கு பிறகு நடைபெற்ற ஒவ்வொரு ஐசிசி தொடரிலும், நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி இருக்கிறது.
கடந்த 2007ம் ஆண்டு அறிமுகமான டி-20 உலகக் கோப்பை தொடங்கி உலகக் கோப்பையில் எதிர்கொண்ட 3 முறையும், இந்திய அணியை நியூசிலாந்து அணி வீழ்த்தியுள்ளது. 2019ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, கோப்பையை வெல்லும் வாய்ப்பை தட்டிப் பறித்து இந்திய ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியது.
தொடர்ந்து, 2021ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியிலும், இந்திய அணியை வீழ்த்தி பட்டத்தை வென்றது. இதனால், ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்கான மிகப்பெரிய ஆபத்தாக நியூசிலாந்து அணி கருதப்படுகிறது.
இந்நிலையில் தான் உலகக் கோப்பை மூலம் நியூசிலாந்து அணியை பழிவாங்க, இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. உள்ளூரில் நடைபெறும் கூடுதல் பலத்துடன் இந்திய அணியின் பேட்டிங் வலுவானதாக உள்ளது.
மறுமுனை பவுலிங் யூனிட்டிலும் இந்திய அணி அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வருகிறது. வேகப்பந்து வீச்சில் மிரட்டும் பும்ரா தற்போது வரை 4 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்துவதோடு, ரன்களையும் கட்டுப்படுத்துகின்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில், நியூசிலாந்து அணியை விழ்த்தி தனது தோல்வி பயணத்திற்கு இந்திய அணி முடிவு கட்டுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -