Hardik Pandya : பாண்டியாவுக்கு என்னாச்சு? அவருக்கு பதில் இனி யார் களமிறங்க வாய்ப்புள்ளது?
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கில் அரைசதத்தையும் விராட் கோலி சதத்தையும் பதிவு செய்தனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்நிலையில் 9 வது ஓவரை வீசிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் பாண்டியா வங்கதேச அணி வீரர் லிட்டன் தாஸ் அடித்த பௌண்டரியை தடுத்தபோது இடது காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் சகித்துக்கொண்டு விளையாடிய பாண்டியாவால் நீண்ட நேரம் வலியை பொறுத்து கொள்ள முடியவில்லை.
மைதானத்தில் படுத்த பாண்டியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மைதானத்தில் இருந்து வெளியே சென்றார். பாண்டியா வீசிய ஓவரில் மீதம் இருந்த மூன்று பந்துகளை இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி வீசினார்.
பாண்டியாவுக்கு மாற்று வீரராக சூர்யா குமார் யாதவ் கலத்திற்கு வந்தார். “பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் காயத்தின் ஆழம் இன்னும் சரியாகத்தெரியவில்லை.. ஸ்கேன் எடுத்த பிறகே அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தின் வீரியம் தெரியவரும்” என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஒரு வேலை பாண்டியா அடுத்த போட்டியில் விளையாடாவிட்டால் அவருக்கு மாற்று வீரராக சூர்யா குமார் யாதவ் அல்லது ஆல் ரவுண்டர் அஸ்வின் விளையாட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
பாண்டிய வரும் போட்டிகளில் விளையாடாவிட்டால் இந்திய அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் தங்களின் ஆதகங்களையும் தெரிவித்து வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -