WI vs NED : சூப்பர் ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற நெதர்லாந்து!
உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டம் தற்போது ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. நேற்று நெதர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ்.
தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடி அணியை நல்ல நிலைமைக்கு எடுத்துக்கொண்டு சென்றனர். பின்னர் வந்தவர்களும் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர்.
நிக்கோலஸ் பூரன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். 50 ஓவர் முடிவில் 374 ரன்கள் எடுத்திருந்தனர்.
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நெதர்லாந்து, வெஸ்ட் இண்டிஸ் ஆடிய நிகரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நெதர்லாந்து அணி வீரர்கள் அதிரடியாக ஆட அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது.
50 ஓவர் முடிவில் நெதர்லாந்தும் 374 ரன்கள் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது.
பின்னர் சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 30 ரன்கள் அடித்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.