ZIM Vs USA : கத்துக்குட்டியை கதறவிட்ட ஜிம்பாப்வே.. பொட்டி படுக்கையை கட்டிய அமெரிக்கா!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்கான தகுதி சுற்று போட்டி தற்போது ஜிம்பாப்வேயில் நடக்கிறது. நேற்று ஜிம்பாப்வே அணிக்கும் அமெரிக்காவுக்கும் போட்டி நடந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்பாவி கையா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சீன் வில்லியம்ஸ்சும் மற்றொரு தொடக்காரரான ஜாய்லார்ட் கம்பி ஆகியோர் அதிரடியாக ஆடினர்.
103 பந்துகளை எதிர்கொண்ட ஜாய்லார்ட் கம்பி 78 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் ஜிம்பாப்வேயின் கேப்டன் சீன் வில்லியம்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை நிறுத்தவில்லை.
65 பந்துகள் மட்டுமே பிடித்த சீன் வில்லியம்ஸ் தன்னுடைய 7 வது சதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் வந்தவர்களும் சிறப்பாக ஆட ரன்னின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருந்தது.
ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சீன் வில்லியம்ஸ் 174 ரன்களில் ஆட்டமிழந்தார்.50 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே 6 விக்கெட் இழப்பிற்கு 408 ரன்கள் எடுத்தது.
இந்த இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்கா 25.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே ஒரு நாள் போட்டியில் 400 ரன்கள் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -