WCC Schedule Announcement : இன்று வெளியாகிறது 50 ஓவர் உலக கோப்பை அட்டவணை..உற்சாகத்தில் ரசிகர்கள்!
இந்த வருடம் நடக்கவிருக்கும் 13 ஆவது ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த போட்டிகளுக்கான உத்தேச அட்டவணை சில நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. அதன்படி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைப்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுள் 8 அணிகள் ஏற்கனவே தேர்வாகிவிட்ட நிலையில் அடுத்த இரண்டு இடங்களுக்கான போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைப்பெற்று வருகிறது.
அப்போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெறும் இரண்டு அணிகள் உலக கோப்பைக்கு தேர்வாகும். அந்த 2 அணிகள் எவை என்று ஜூலை 9 ஆம் தேதி தான் தெரிய வரும் என்பதால் அட்டவணை வெளியாக தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் உலக கோப்பைக்கான அட்டவணை இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடைப்பெறும் ஐ.சி.சி நிர்வாகிகளின் செய்தியாளர் சந்திப்பில் இந்த அட்டவணை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -