Ind vs WI Test: அஸ்வினின் அபாரமான பந்துவீச்சில் திக்கு முக்காடும் வெஸ்ட் இண்டீஸ் அணி!
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் நடைப்பெற இருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்நிலையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் டொமினிகாவில் நேற்று தொடங்கியது.இந்திய அணிக்காக அறிமுக வீரர்களாக ஜெய்ஸ்வாலும் இஷான் கிஷனும் அணியில் இணைந்தனர்.
பிறகு டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, கேப்டன் ப்ராத்வெய்ட்டும், தேஜ்நரின் சந்தர்பாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இவர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினாலும் அஸ்வினின் சுழற்பந்துவீச்சில் ஒரு மணி நேரம் மட்டுமே தாக்கு பிடிக்க முடிந்தது. அடுத்து வந்த ரேமன் ரீபரும் தன் விக்கெட்டை பறிக்கொடுத்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
இறுதியாக 64.3 ஓவர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. அதை தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் ஜெய்ஸ்வாலும் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் களமிறங்கினர்.நாள் முடிவில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 80 ரன்கள் எடுத்திருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டமானது இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மேலும் இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் அஸ்வின் 700 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -