WI Vs OMA : உலக கோப்பை வாய்ப்பை தவறவிட்ட ஓமன்..ஆறுதல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்!
சூப்பர் சிக்ஸ் தகுதி சுற்று போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஓமன் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஓமன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் பேட்டிங் செய்த ஓமன் அணியின் ஆட்டக்காரர்களான காஷ்யப் பிரஜாபதி, ஜதீந்தர் சிங் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேர பின்னர் வந்த ஓமன் அணியின் கேப்டன் அகிப் இல்யாஸ் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
சோயப் கான், சூரஜ் குமார் ஆகியோர் அரைசதம் அடிக்க ஓமன் அணி மதிக்கதக்க ரன்னை எட்டியது. 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த எளிமையான இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆரம்பம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஓன்சன் சார்லஸ் மட்டும் 4 ரன்களில் ஆட்டமிழக்க மற்றவர்கள், ஓமன் வீரர்கள் வீசிய பந்தை நாலாப்புறமும் சிதறடித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் சதம் அடித்து அசத்தினார். 104 பந்துகளை எதிர்கொண்ட அவர் 15 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்தார்
33.4 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மற்ற அணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -