NRK Vs BT : அபாரமாக ஆடி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்த நெல்லை அணி!
டி.என்.பி.எல் 7 வது சீசனின் கடைசி லீக் போட்டியான நேற்று, திருச்சி அணியை நெல்லை ராயல் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிருச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜு ,கே ராஜ்குமார் ஆகியோர் சுமாரான தொடக்கத்தையே கொடுத்தனர். 6 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று நேரம் நிறுத்தப்பட்டது.
பின்னர் 19 ஓவர் நிர்ணயிக்கப்பட்டு போட்டி தொடங்கியது. 19 ஓவர் முடிவில் திருச்சி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. திருச்சி அணியின் வீரர் ஜாபர் ஜமால் அபாரமாக ஆடி 96 ரன்கள் எடுத்தார்.
வானிலை மாற்றத்தின் காரணமாக நெல்லை அணி 16 ஓவரில் 130 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுமாராக தொடங்கினர். பின்னர் களமிறங்கியவர்கள் சிறப்பாக ஆடி அணிக்கு ரன்களை குவித்தனர்.
குருசாமி அஜிதேஷ் ,நிதிஷ் ராஜகோபால் ஆகியோர் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். அபாரமாக ஆடிய குருசாமி அஜிதேஷ் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். இவரின் அரைசதம் அணிக்கு நிம்மதியை கொடுத்தது.
11.5 ஓவரில் 135 ரன்கள் எடுத்து, “டக்வொர்த் லீவிஸ்” விதிப்படி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நெல்லை. நடந்து முடிந்த 7 போட்டிகளிலும் ஒரு வெற்றியை கூட பெறாத அணி என்ற பெயரை பெற்றது திருச்சி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -