Ollie pope : தோள்பட்டையில் பலத்த காயம்.. ஆஷஸ் தொடரிலிருந்து விலகிய இங்கிலாந்து துணை கேப்டன் ஒல்லி போப்!
இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே தற்போது 5 தொடர்களை கொண்ட ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டி முடிவடைந்துவிட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநடந்து முடிந்த இரண்டு ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதனால் அடுத்து நடக்கவிருக்கும் மூன்று ஆஷஸ் போட்டிகளிலும் வெற்றி பெறும் முனைப்பில் இங்கிலாந்து உள்ளது.
இங்கிலாந்து துணை கேப்டனான ஒல்லி போப் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்தார். இதன் விளைவாக ஒல்லி போப் இனி வரும் ஆட்டங்களில் விளையாட போவதில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தோள்பட்டையில் வலி அதிகமாக இருந்ததால் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இதில் தோள்பட்டை எலும்பு சற்று இறங்கி இருப்பது தெரியவந்தது.
இதனால் மருத்துவர் ஆலோசனை படி தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதால் ஒல்லி போப் இனி வரும் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து அணி சார்பில் கூறப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த இரண்டு `டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்த இங்கிலாந்து அணிக்கு ஒல்லி போப்பின் விலகல் மேலும் பின்னடைவை தந்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -