Virat Kohli : சாதனைகளுக்கு மேல் சாதனைகளை படைத்து வரும் ரன் மெஷின் கோலி!
நடப்பு 2023 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிகள் நிறைவடைந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
உலகக்கோப்பை தொடரில் மொத்தம் பத்து அணிகள் இடம் பெறும். ஒவ்வொரு அணியும் ஒன்பது போட்டிகள் விளையாட வேண்டும். அதிக புள்ளிகளை பெற்று பட்டியலில் டாப் நான்கு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்
நடந்து முடிந்த ஒன்பது லீக் போட்டி மற்றும் அரையிறுதி போட்டியை சேர்த்து பத்து போட்டிகளில் இந்திய அணி வென்றிருக்கிறது.இதில் இந்திய அணி சார்பாக முகமது ஷமி 23 விக்கெட்டுகள் எடுத்து 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக திகழ்கிறார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் அடித்தவர் பட்டியலில் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி 711 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு வீரர் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி.
இதே போன்று 2014 டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 319 ரன்கள் அடித்து வரலாற்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.