Mohammed Shami : ஒரே போட்டியில் இரண்டு சாதனைகளை படைத்த முகமது ஷமி!
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் புதன்கிழமை அன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
50 ஓவர் முடிவில் இந்திய அணி 397 ரன்களை அடித்திருந்தது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் மற்றும் விராட் ஆகியோர் தங்களுடைய சதத்தை பதிவு செய்திருந்தனர்.
398 ரன்கள் என்ற அபார இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியை திணறடித்தார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.
மொத்தம் 9.5 ஓவர்கள் வீசிய ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த 7 விக்கெட்டுகளை வழங்கியதன் மூலம் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார் முகமது ஷமி.
முதல் சாதனை அரையிறுதி போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தது, இரண்டாவது சாதனை 2023 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 23 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -