ITT Vs CSG: திருப்பூர் அணியை சுலபமாக வீழ்த்தி வெற்றி பெற்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்!
7வது டி.என்.பி.எல் சீசன் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் விளையாடிகின்றனர். ஒவ்வொரு அணியியும் தலா ஒரு முறை மோதவேண்டும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில் திருப்பூர் அணி சேப்பாகம் அணியுடன் மோதியுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடாஸ் வென்ற திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
திருப்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளித்தனர். துஷார் ரஹேஜா, என்.எஸ். சதுர்வேத் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
பாட்டிங் ஆர்டரில் உள்ள மற்றவர்களும் சிறப்பாக ஆடவில்லை. ராதாகிருஷ்ணன் மட்டும் சற்று பொறுமையாக ஆடி 36 ரன்கள் அடித்தார்.
20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்திருந்தது திருப்பூர் அணி
பின்னர் களமிறங்கிய சேப்பாக்கம் அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். பாபா அபராஜித் 46 ரன்கள் அடித்திருந்தார். 15.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்க்கு 121 ரன்கள் அடித்து தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சேப்பாகம் அணி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -