Ind Vs Aus : கதறும் இந்திய அணியின் ரசிகர்கள்.. வெற்றி கோப்பையை தட்டித்தூக்கிய ஆஸ்திரேலியா!
உலக கோப்பை டெஸ்ட் போட்டியில் 444 இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய. களத்தில் இறங்கிய விராட் கோலியும் ரஹானேவும் மதியம் உணவு வரை ஆட்டம் இழக்காமல் இருந்தால் உலக கோப்பை இந்தியா வசம் திரும்ப வாய்ப்பு இருந்தது.
ஆட்டம் ஆரம்பித்து 7வது ஓவரில் விராட் கோலி கவர் டிரைவ் அடிக்க முயற்சித்த போது அவர் அடித்த பந்தை ஸ்மித் கேட்ச் செய்தார்.
கோலியை தொடர்ந்து ஆல் ரவுண்டர் ஜடேஜா ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். 200 ரன்களை கடக்க உதவிய ரஹானேவும் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சால் ஆட்டம் இழந்தார்.
பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
63.3 ஓவரில் இந்தியா அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதனால் ஆஸ்திரேலியா அணி 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதுவரை அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே அணி என்ற சாதனையை படைத்துள்ளது ஆஸ்திரேலியா.