TNPL 2023 : இன்றிலிருந்து தொடங்கும் 7வது சீசன் டி.என்.பி.எலின் இரண்டாது லீக்!
7வது சீசன் டி.என்.பி.எல் போட்டி தற்போது நடந்து வருகிறது.இதன் முதல் கட்ட ஆட்டம் கோவையில் உள்ள நத்தம் பகுதியில் வியாழக்கிழமையுடன் முடிந்தது.
இரண்டாம் கட்ட ஆட்டம் சேலம் மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளில் இன்றிலிருந்து தொடங்க உள்ளது.
இன்று மொத்தம் இரண்டு ஆட்டங்கள் நடக்க உள்ளது . மதியம் 3:15 மணிக்கு சேலம் வாழப்பாடி மைதானத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையே நடக்க உள்ளது. இதில் நெல்லை அணி, புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திலும் சேப்பாக் அணி நான்காம் இடத்திலும் உள்ளது.
அதே மைதானத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது மதுரை பாந்தர்ஸ். சேலம் இதுவரை நடந்த மூன்று ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. மதுரை இதுவரை நடந்த ஆட்டத்தில் வெற்றி பெறவில்லை. இந்த இரு அணிகளும் இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெரும் முனைப்புடன் விளையாடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. அதனால், இனி சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.
புள்ளி பட்டியலில் திண்டுக்கல் முதல் இடத்திலும், கோவை இரண்டாவது இடத்திலும் , நெல்லை மூன்றாவது இடத்திலும் , சேப்பாக் நான்காவது இடத்திலும் உள்ளது.
இன்று நடக்கும் இவ்விரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 நேரடி ஒளிபரப்பு செய்கிறது.