ICC Champions trophy 2013 : 10 வருடங்களுக்கு முன் இதே நாளில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா!
2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்தது. இதில் 8 அணிகள் பங்கேற்றன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதில் 4 அணிகள் குரூப் ஏ-வாகவும் மற்ற நான்கு அணிகள் குரூப் பி-யாகவும் பிரிக்க பட்டு போட்டி நடத்தப்பட்டது.
இதில் குரூப் பி-யில் இந்தியா ஆடியது. ஒரு அணி மற்ற அணிகளுடன் தல ஒரு முறை மோத வேண்டும். இந்தியா இந்த லீக் தொடரில் தோல்வியே அடையவில்லை என்பது குறிப்பிடதக்கது
குரூப் ஏ-யில் இங்கிலாந்து அணி முதல் இடத்தை பிடித்தது. இங்கிலாந்தும் இந்தியாவும் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இறுதி போட்டி நடக்கும் நாள் அன்று கனமழை பெய்ததால் 50 ஓவர் ஆட்டம் 20 ஓவராக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.
முதலில் களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 129 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 124 ரன்கள் எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. தோனி கேப்டனாக இருந்த காலத்தில் அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற புகழையும் பெற்றார் தோனி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -