Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Rohit Sharma : ‘ரோஹித் ஷர்மா கேப்டன்ஷிப்பை பற்றி பெருமையாக பேச எதுவுமில்லை..’ இந்நாள் கேப்டனை சாடிய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரோஹித் ஷர்மா கேப்டன்ஷிப்பை பற்றி விமர்சித்து பேசியிருந்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றபோது நான் அவரிடம் அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் கேப்டன்ஷிப் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது” - கவாஸ்கர்
“டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி, 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஷிப் பற்றி பேசும் அளவிற்கு ஒன்றும் இல்லை. ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றவரும், 100 போட்டிகளுக்கும் மேலாக கேப்டனாக இருந்தவருமான ரோஹித் ஷர்மா கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இறுதி சுற்றுக்கு கூட அணியை அழைத்து செல்ல முடியவில்லை.” - கவாஸ்கர்
உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது.ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டிற்கு பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ள தெரியாது என அறிந்தும், அவர் 80 ரன்களுக்கு மேல் எடுத்த பிறகுதான் பவுன்சர் பந்துகளை இந்திய அணியின் வீரர்கள் வீச தொடங்கினர். இதனை முன்பே செய்திருந்தால் என்ன? - கவாஸ்கர்
“உண்மையை கூறவேண்டும் என்றால் ஒவ்வொரு பெரிய தொடருக்கு முன்னால் முன்னணி வீரர்கள் முன்கூட்டியே பயிற்சியை தொடர வேண்டும். ஆனால் அவர்கள் யாரும் அப்படி பயிற்சி தொடங்குவதில்லை. ஏனென்றால் அவர்கள் எப்படியும் அணியில் தேர்வாகி விடுவார்கள் என்று அவர்களுக்கு தெரியும்.” - கவாஸ்கர்
மேலும் பேசிய அவர் “போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராகுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக இரண்டு பயிற்சி ஆட்டங்கள் விளையாட வேண்டும். அதில் ஜூனியர் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் திறமை வெளிப்படும் அத்துடன், சீனியர் வீரர்களுக்கு பொறுப்பும் வரும்.” என கூறினார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -