NRK Vs DD : கடைசி பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டு இறுதி சுற்றுக்குள் நுழைந்த நெல்லை அணி!
7 வது சீசன் டி.என்.பி.எல் போட்டியில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று இறுதி சுற்றுக்கான தகுதி போட்டியில் திண்டுக்கல் அணி நெல்லை அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் திண்டுக்கல் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல தொடக்கத்தையே கொடுத்தனர். விமல் குமார் 36 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டானார்
பின்னர் வந்த பூபதி குமார் தொடக்க ஆட்டக்காரர் சிவம் சிங்குடன் சேர்ந்து சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்திருந்தது திண்டுக்கள். அதிகபட்சமாக சிவம் சிங் 76 ரன்கள் எடுத்திருந்தார்.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நெல்லை நிதானமாக ஆடியது.
சீரான இடைவெளியில் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க பின்னர் வந்த குருசாமி அஜிதேஷ் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். கடைசி இரண்டு ஓவரில் 37 ரன்கள் தேவை பட்ட நிலையில் நெல்லை அணி வீரன் ஈஸ்வரன் தொடர்ச்சியாக மூன்று சிக்சரை பறக்க விட்டார்.
19 வது ஓவரில் மட்டும் 33 ரன்கள் எடுத்தது நெல்லை. கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் சிக்சரை பறக்கவிட்ட நெல்லை அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. நாளை நடக்கவிருக்கும் இறுதி போட்டியில் நெல்லை அணியும் கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன.