Saud Shakeel : பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறும் இலங்கை.. இரட்டை சதம் விளாசிய சௌத் ஷகீல்!

முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 10 மணி அளவில் தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய முன்வந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
முதல் நாள் 312 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை. அதிகப்பட்சமாக தனஞ்சய டி சில்வா 214 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 122 ரன்கள் எடுத்தார்.

இரண்டாம் நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுக்கவில்லை. அப்துல்லா ஷபீக் (19), இமாம்-உல்-ஹக் (1), ஷான் மசூத்(39) , பாபர் அசாம் (13), சர்பராஸ் அகமது (17) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய சௌத் ஷகீல் மற்றும் ஆகா சல்மான் பொருப்புடன் விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான்.
மூன்றாவது நாளான நேற்று சௌத் ஷகீல் இரட்டை சதம் எடுத்து பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.
461 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது பாகிஸ்தான். பின்னர் களமிறங்கிய இலங்கை மூன்றாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -