Jasprit Bumrah : சிங்கம் களமிறங்கிருச்சி டோய்.... நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் களத்தில் பயிற்சியை தொடங்கிய பும்ரா!
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடுகிறார்
இந்திய அணிக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கும் கடைசியாக நடந்த டி20 போட்டியின் போது பும்ராவிற்கு பயங்கரமான முதுகு வலி எற்ப்பட்டது. இதன் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகினார் பும்ரா.
பும்ரா ஓய்வெடுத்து வருவதாக ஐசிசி நிர்வாகம் தெரிவித்திருந்தது
தற்போது நேஷனல் கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ) மைதானத்தில் பும்ரா பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
இதனை வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இந்தியன் கிரிக்கெட் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேக் செய்துள்ளார் பும்ரா
இந்த பதிவிற்கு, ‘உங்களை கூடிய விரைவில் களத்தில் சந்திக்க ஆவலாக உள்ளோம்’என இந்தியன் கிரிக்கெட் அணி கமெண்ட் செய்துள்ளது. இந்த பதிவை தொடர்ந்து அடுத்த மாதம் அயர்லாந்து அணிக்கு எதிராக நடக்கவிருக்கும் மூன்று டி 20 போட்டியில் பும்ரா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.