SL Vs AFG : ஆப்கானிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இலங்கை.. சரிக்கு சமமாக இருக்கும் இரு அணிகள்!
இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று பன்டோட்டாவில் நடந்தது. முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை அணி இரண்டாவது போட்டியில் அதிரடி மாற்றத்தை காட்டியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க ஆட்டகாரர்கள் பதும் நிசாங்கா (43) திமுத் கருணாரத்னே (52) ஆகிய இருவரும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
களம் இறங்கிய குசல் மெண்டிஸ் 78 ரன்கள் அடித்து அசத்தினார். கடைசியாக 50 ஓவர் முடிவில் 323 ரன்களை அடித்தது இலங்கை .
பின்னர் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் 12 பந்துகளுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
போராடி ஆடிய இப்ராகிம் (54) ரமத் ஷா(36) ஹஷ்மத்துல்லா (57) அடித்து ஆட்டம் இழந்தனர். இவர்களை தொடர்ந்து களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
42.1 ஓவரில் 191 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது ஆப்கானிஸ்தான். இலங்கை 132 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது . இதுவரை நடந்த இரண்டு போட்டியில், ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றியையும் இலங்கை ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -