SL Vs Afg: பதிரனா வீசிய பந்துகளை பதம் பார்த்த ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்!
நேற்று இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெற்றது. மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட இத்தொடரில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் களம் இறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பின்னர் களம் இறங்கிய சரித் அசலங்கா - தனஞ்சய டி சில்வா ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர்.
50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 268 ரன்களை குவித்தது ஸ்ரீலங்கா அணி. இதில் சரித் அசலங்கா அதிகபட்சமாக 91 ரன்கள் அடித்திருந்தார்.
269 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜத்ரான் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடி வந்தார்.
சமீபத்தில் ஐபிஎல் மூலம் பிரபலமான மத்தீஷா பதிரனா வீசிய பந்துகளை, ஆப்கானிஸ்தான் வீரர்கள் நாலாபுரமும் சிதர விட்டனர். இவர் 8.5 ஓவரில் 66 ரன்கள் கொடுத்தார்.
கடைசி வரை போராடி ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார் இப்ராஹிம் ஜத்ரான் . 98 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்த இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -