Shikhar Dhawan : ‘இந்திய அணியில் இடம்பெற்றாததால் வேதனையாக உள்ளது..’ உருக்கமாக பேசிய ஷிகார் தவான்!
இந்திய அணியின் ஓப்பனிங் இடது கை பேட்ஸ்மேன் ஷிகர் தவான். சமீப காலமாக இவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App37 வயதான ஷிகர் தவான் நேற்று அளித்த பேட்டியில், “சீனாவில் நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டுக்கான போட்டியில் நான் இந்திய அணியில் இடம் பெறவில்லை. இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.”
“கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் இடம் பெற்றிருக்கும் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன்” ஷிகர் தவான்
“இந்திய அணிக்கு நான் விளையாட தயாராக உள்ளேன், அதற்காக உடல் தகுதியையும் நல்ல நிலையில் வைத்துள்ளேன், எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நான் தயார்”-ஷிகர் தவான்
“அதேபோல் வருகின்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4 வது வரிசையில் அனுபவமிக்க வீரர்களை களத்தில் இறக்க வேண்டும், தற்போது சிறப்பாக ஆடிவரும் சூரியகுமார் யாதவ் அந்த இடத்தை நிறப்புவார் என்று எனக்கு தோன்றுகிறது” - ஷிகர் தவான்
“இதனால் அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு திரும்புவேன் என்று நம்பிக்கையுடன்”கூறினார் ஷிகர் தவான்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -